ஐக்கிய மக்கள் சுத்தந்திர கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச ஐ. நா. மனித உரிமை ஆணையாளரினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கை விடயமாக பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை கோரியுள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சைத் அல் ஹுசைன் இலங்கை தொடர்பான அறிக்கையை ஜெனீவாவில் வெளியிட்ட நிலையில் பல தரப்பினர் இதனை வரவேற்றனர். அதே நேரம் இலங்கையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் நாட்டில் சில முக்கிய பிரமுகர்கள் இதற்கு கடும் எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.
மேற்படி அறிக்கை தொடர்பாக சபாநாயகரிடம் பாராளுமன்றத்தில் விவாதமொன்றை தான் கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments