Subscribe Us

header ads

மக்கா கிரேன் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு -அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுதாபம்


சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மக்காவின் ஹரம் ஷரீபின் தவாப் செய்யும் பகுதியில் கட்டுமானப்பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கிரேன் முறிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 107 பேர் பலியாயினர். மேலும் 200 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மக்கா விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். புனித கடமைகளின் பொழுது வபாத் ஆனவர்களை எல்லாம் வல்ல அல்லாஹ் அங்கீகரித்து, அவர்களது பாவங்களை மன்னித்து சுவன வாழ்வை வழங்கவும், காயமுற்றிப்பவர்கள் கூடிய விரைவில் பூரண சுகம் பெறவும், எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments