Subscribe Us

header ads

தேநீர் விற்ற மோடி பிரதமராக முடியுமானால் வடை விற்ற எனக்கு ஏன் முடியாது : ஊவா முதலமைச்சர்


தேநீர் விற்ற மோடி இந்தியாவின் பிரதமராகியிருக்கின்ராரென்றால் ரயிலில் வடை விற்ற என்னால் ஏன் அவ்வாறானதோர் உயர் பதவிக்கு வர முடியாது இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு அப்படியான சிறப்பான பதவிக்கு ஏன் வர முடியாது என்று ஊவா மாகாண புதிய முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் கதிரையில் அமர்வதற்கு பாடுபட்ட அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பைசர் முஸ்தபா மற்றும் டிலான் பெரேரா ஆகியோரை நினைவு கூர்வதுடன் அவர்களுக்கு கௌரவத்தை அளித்து நன்றியும் தெரிவிக்கிறேன் என்றும் கூறினார்.
பதுளை நகர் மஸ்ஜிதுல் அன்வர் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்ட முதலமைச்சருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இதன் போது சிறப்புரை நிகழ்த்துகையிலேயே முதல்வர் சாமர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments