சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இத்தகைய சம்பவங்களின் போது எவ்வித பாரபட்சமும் பார்க்கப்படாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முன்னெடுத்துள்ள தேசிய மட்டத்திற்கான செயற்றிட்டங்கள் தொடர்பில் மாவட்ட செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடலின்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்றிட்டம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின்போது உள்நாட்டு உணவு உற்பத்தி, வீட்டுத் தோட்ட பயிர்செய்கை, போதைப் பொருள் நிவாரணத் திட்டம், சிறுநீரக நோய் நிவாரணத் திட்டம் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments