அமைச்சர் பதவிகிடைக்காத சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.
இன்று மாலை ஐந்து மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
அமைச்சுப் பதவி கிடைக்காத சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஜனாதிபதி இதன்போது விளக்கமளிக்கவுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய கட்சியாகும். எனினும் கட்சியில் சிலர் மட்டும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டுள்ள நிலையில், ஏனையோருக்கு அது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து இன்றைய சந்திப்பின் போது ஜனாதிபதி தனது கட்சி உறுப்பினர்களிடம் வலியுறுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments