Subscribe Us

header ads

தங்கள் கணக்குகளை ஆராய்வதற்கு முன் நாட்டு சிறுவர்களை காப்பாற்றவும்! நாமல் கோரிக்கை


கடந்த அரசாங்கத்தின் சிலரை காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைத்து விசாரணை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் கடுமையான முயற்சிகளை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இடம்பெறாத தவறுகள் தொடர்பில் இவ்வாறு விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

நேற்று நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு எதிராக மேற்கொள்ளும் விசாரணைகளுக்கான முயற்சிகளை நாட்டில் இடம்பெறுகின்ற குற்றங்களை தடுப்பதற்கு மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

தான் உட்பட குழுவினரின் சிறுவர் கணக்கு உட்பட விசாரணை மேற்கொள்ளும் இந்த காவல்துறையினர், ஐந்து, ஆறு வயதுடைய ஒன்றும் அறியாத சிறுவர்கள் படுகொலை செய்யப்படுகின்றமை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும் நாட்டின் குடிமகன் என்ற ரீதியிலும் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments