Subscribe Us

header ads

யாழ் மாநகர இறைச்சி கடைகள் திறக்கப்படவில்லை.நுகர்வோர் பாதிப்பு (படங்கள் இணைப்பு)


யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட இறைச்சிக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இன்று (21)காலை முதல் ஆரம்பமான இப்போராட்டம் தகுந்த நீர்வு கிடைக்கும் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக இறைச்சிக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்கடையடைப்பு மேற்கொள்ள காரணம் வீணான பொலிஸ் தலையீடு மற்றும் மாநகர ஆணையாளருமே என ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 22 மாட்டு இறைச்சி கடைகள்,09 ஆட்டு இறைச்சி கடைகள் இயங்குகின்றன.

இவை தற்சமயம் பூட்டப்பட்டுள்ளதால் பெரும் நட்டங்களை எதிர்கொள்வதாகவும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாவாந்துறை,பண்ணை,பாஷையூர்,குரு கர்,புங்கன்குளம்,அரியாலை,கல்வியன்;காடு,ஐந்து சந்தி பகுதியில் உள்ள இறைச்சி கடைகளே இவ்வாறு பூட்டப்பட்டு காணப்படுகிறன.

-Farook Sihan-








Post a Comment

0 Comments