Subscribe Us

header ads

ஒரு பள்ளிக்கூடம், நதியில் மிதக்கும் படகில் நடக்கிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதுதானே... அது எப்படி, எங்கே என்று தெரிந்துகொள்ளலாம்...

ரு பள்ளிக்கூடம், நதியில் மிதக்கும் படகில் நடக்கிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதுதானே... அது எப்படி, எங்கே என்று தெரிந்துகொள்ளலாம்...
நாம், விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வோம். நதிக்கரை என்றால், அங்கு உள்ள படகில் ஏறி ஜாலியா ஒரு ரவுண்டு போய் வருவோம். ஆனால், புனிதத் தலமான வாரணாசியில் உள்ள சிறுவர்களோ, தினமும் படகில் ஏறுகிறார்கள். ஏன் தெரியுமா? இவர்களின் பள்ளிக்கூடமே அந்தப் படகுதான். காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த பள்ளிக்கூடத்தில் சுமார் 70 மாணவர்கள் படிக்கிறார்கள்.
இந்தப் படகுப் பள்ளியில், நூலகம் மற்றும் கம்ப்யூட்டர்களும் உள்ளன. படிப்பு தவிர, இந்திய மொழிகள் பலவற்றைச் சொல்லித்தருகிறார்கள். சூரிய மின்சக்தியால் இயங்கும் இந்தப் படகுப் பள்ளிக்கூடத்தை, 'குடியா' என்னும் தொண்டு நிறுவனம் நடத்திவரும் அஜித் சிங் என்பவர், ஐந்து வருடங்களுக்கு முன்பு தொடங்கினார். மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், படகுகள் ஓட்டுவது தொழிலாக இருக்கிறது. பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாமல், கங்கை நதிக்கரையில் தேங்காய், பூ, மெழுகுவர்த்திகள் விற்றார்கள்.



அஜித் சிங் முதல்முறை இங்கு வந்தபோது, பள்ளிக்கூடம் செல்லாமல் பூ, பழங்கள்  விற்ற சிறுவர்களைக் கண்டதும், இவர்களுக்கு படிப்பு சொல்லித்தர வேண்டும் எனத் தீர்மானித்தார். கங்கை நதிக் கரையோரம், பழைய படகு ஒன்றில் பள்ளிக்கூடம் தொடங்கினார். முதலில் ஐந்து மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். மெல்ல மெல்ல பல மாணவர்கள் இந்தப் பள்ளியில் சேர ஆரம்பித்தனர். இடம் பற்றாக்குறை ஏற்படவே, பள்ளியைப் பெரிய படகுக்கு மாற்றினார்.

நான்கு ஆசிரியர்களைக்கொண்ட இந்தப் படகுப் பள்ளிக்கூடத்தில், மாணவர்கள் ஜாலியாக பாடங்கள் கற்கிறார்கள். அவ்வப்போது இந்தப் பள்ளிப் படகு, கங்கை நதியில் ஜாலி டிரிப் அடிப்பதும் உண்டு.

-என்.மல்லிகார்ஜுனா

Post a Comment

0 Comments