Subscribe Us

header ads

ஒட்டகம் மேய்க்க வைத்து விட்டார்கள்... ஒரு தமிழரின் குமுறல்! (வீடியோ)


தேனி மாவட்டம், கம்பம் கோம்பை சாலையை சேர்ந்த இமாம்ஷா மகன் சதாம் உசேன் (25). குவைத்தில் டிரைவர் வேலைக்கு கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்றுள்ளார். இதற்காக கும்பகோணம் சோலைபுரத்தைச் சேர்ந்த காஜாமைதீன் என்பவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். டிரைவர் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சதாம் உசேன் அங்கு 65 ஒட்டகங்களை மேய்க்கும் பணியை செய்யுமாறு துன்புறுத்தப்பட்டார். அந்த வேலையை செய்ய மறுத்ததால் அவருக்கு 2 நாட்கள் உணவு மறுக்கப்பட்டது.


இது குறித்து சதாம் உசேனின் மனைவி யாஸ்லின் பானுவிற்கு தெரிய வரவே அதிர்ச்சியடைந்தார். தனது நிலை குறித்து சதாம் உசேன் நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்தார். எனவே யாஸ்லின்பானு தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் புகார் அளித்தார்.


மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மகேசிடமும் புகார் அளித்துள்ளார். அதில், குவைத்தில் கொத்தடிமையாக உள்ள தனது கணவரை மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் சதாம் உசேனை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

Post a Comment

0 Comments