களவு எடுத்தமை நிரூபிக்கப்பட்டால் வயிற்றைப் பிளந்து மரணிப்பேன் என முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மஹிந்தோதய ஆய்வு கூட நிர்மானப் பணிகளின் போது கோடிக்கணக்கான ரூபா கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்த திட்டத்தில் ஐந்து சதமேனும் பெற்றுக்கொள்ளவில்லை.
களவு எடுத்தமை நிரூபிக்கப்பட்டால் காலி முகத்திடலில் வயிற்கை கத்தியால் பிளந்து உயிரிழப்பேன்.
எனது வாழ்நாளில் சுமத்தப்பட்ட மிகவும் மோசமான குற்றச்சாட்டு இதுவாகும்.
ஜே.வி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க தம்மீது குரோத உணர்வைத் தூண்டும் வகையில் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தப் போலிக் குற்றச்சாட்டுக்கு நட்ட ஈடாக 50 கோடி ரூபாவினை ஜயசிங்க வழங்க வேண்டும்.
அவ்வாறு வழங்கத் தவறினால் வழக்குத் தொடரப்படும் என பந்துல குணவர்தன, நேற்று நாரஹென்பிட்டி அபயாராமயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
0 Comments