Subscribe Us

இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட எந்தவொரு உடன்படிக்கையிலும் நன்மை கிட்டவில்லை!– ரதன தேரர்


இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட எந்தவொரு உடன்படிக்கையினாலும் நன்மை கிட்டவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் சீபா உள்ளிட்ட எந்தவொரு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டாலும் அது குறித்து முதலில் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

எந்தவொரு உடன்படிக்கையையும் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக நாடாளுமன்றில் சமர்ப்பித்து அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இரசிகயமான முறையில் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட அனுமதிக்கப்பட முடியாது.

கடந்த காலங்களில் இந்தியா நடந்து கொண்ட விதத்தை கருத்திற்கொள்ளும் போது எந்த வகையிலும் திருப்தி கொள்ள முடியாது.

உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் போது அது நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது.

இந்தியாவுடனான உடன்படிக்கைகளின் போது நாம் அதனை சரியான முறையில் பின்பற்றிய போதிலும் இந்தியா அவ்வாறு செய்வதில்லை என அதுரலிய ரதன தேரர் சிங்கள பத்திரிகையொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

Post a Comment

0 Comments