Subscribe Us

header ads

09 உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதாக போலிப் பிரசாரம்!- நிதியமைச்சர்

உருளைக்கிழங்கு, சீனி தவிர வேறு பொருட்களின் வரிகள் அதிகரிக்கப்படவில்லை. ஒன்பது வகை உணவுப் பொருட்களில் விசேட வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆணித்தரமாக மறுத்துள்ளார்.


உள்ளூர் உற்பத்தியாளர்களின் வசதி கருதி சீனி மற்றும் உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 09 பொருட்களின் இறக்குமதி வரிகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அமைச்சர் ஆணித்தரமாக கூறினார்.

பருப்பு, வெங்காயம், கெளபி, குரக்கன், மாஜரின் உள்ளிட்ட 09 வகை உணவுகளின் இறக்குமதி வரிகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த காலங்களின் குரக்கன், கெளபி, கொரியக் கடலை, மாஜரின் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் கேள்விகளைப் பொறுத்தே இவற்றுக்கான மேலதிக வரி தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த நடைமுறை கைவிடப் பட்டிருப்பதாகவும் அமைச்சர் கருணாநாயக்க தெரிவித்தார்.

சீனி மற்றும் உருளைக்கிழங்கின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அவற்றின் விலையை ஒரே மட்டத்தில் பேணும் நோக்கிலுமே அவை இரண்டிற் குமான இறக்குமதிகள் அதிகரிக்கப்பட்டி ருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய சீனி இறக்குமதி வரி 30 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக 10 ரூபாவாலும் உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி 18 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக 12 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவற்றைத் தவிர்ந்த ஏனைய அனைத்து உணவுப் பொருட்களின் இறக்குமதி வரியும் வழமை போன்றே அறவிடப்படு வதாகவும் அதில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் ஆணித்தரமாக கூறினார்.

சர்வதேச சந்தையில் சீனியின் விலை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காகவே இறக்குமதி வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற போதும் கொள்வனவின் போது சில்லறை விலையில் மாற்றம் ஏற்படாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி பக்கற் செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின் ஆகக்கூடிய விலை 95 ரூபாவாகவும் பக்கற் செய்யப்படாத ஒரு கிலோ கிராம் சீனியின் ஆகக்கூடிய விலை 88 ரூபாவென்றும் அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ளது. இதனை கடுமையாக கடைப்பிடிக்கவும் அரசாங்கம் திட்டம் தீட்டியுள்ளது.

Post a Comment

0 Comments