Subscribe Us

header ads

ஜனாதிபதி அவர்களின் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி


உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து இலங்கைவாழ் முஸ்லிம்களும் கொண்டாடும் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

அல்லாஹ்வின் பெயரால் உயர்ந்ததியாகங்களைச் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஹஜ் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் மக்களின் மிகவும் முக்கியமான வருடாந்த நிகழ்வாகும்.

பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகளையும் கலாசாரங்களையும் உடைய இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வை வணங்கும் காட்சி ஹஜ் யாத்திரை உணர்த்தும் ஐக்கியத்தை அடையாளப்படுத்திநிற்கிறது.

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு இந்த வருடாந்த ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்வதற்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் வழங்குகின்றது. 

இதன்மூலம் அவர்கள் புனிதஅல்குர்ஆனினதும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளுக்கான தமது அர்ப்பணங்களை புதுப்பித்து, உலகெங்கிலுமுள்ள மக்கள் மத்தியில் சமாதானம்,சகோதரத்துவம் மற்றும் புரிந்துணர்வுநிலவவேண்டும் எனப் பிரார்த்திக்கின்றனர்.

இலங்கைவாழ் முஸ்லிம்கள் அடுத்தவர்களை பரஸ்பரம் மதித்து, நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஐக்கியத்துடனும் நல்லிணக்கமாகவும் வாழ்ந்துவருகின்றனர். இந்த நல்லிணக்கமும் நட்புறவும் அவர்கள் பின்பற்றும் இஸ்லாம் மார்க்கம் அவர்களிடம் ஏற்படுத்திய பண்புகளாகும்.

இந்த விசேடதினத்தில் முஸ்லிம்களுடைய பிரார்த்தனைகள் எல்லா மக்களினதும் சமாதானத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் இருக்குமென்பதில் சந்தேகமில்லை.
இலங்கைவாழ் முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஈதுல் அல்ஹா வாழ்த்துக்கள்.

மைத்ரிபால சிறிசேன

Post a Comment

0 Comments