புத்தளம் நகர சபையினால், “நகரின் பலம் நீங்களே” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட வருமான வரி சேகரித்தல் மற்றும் சேவை வழங்கும் நடமாடும் சேவை நிகழ்வு 01.09.2015 அன்று சேனகுடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இச்சேவை நிகழ்வில் பாதைகள் செப்பனிடல், வீதி மின்விளக்குகள் பொறுத்தல் மற்றும் பராமரித்தல், புதிய மின் மற்றும் நீர் இணைப்புக்களுக்கான அனுமதி வழங்குதல், குப்பைக் கூளங்களை அகற்றுதல், வரிப்பணம் அறவிடுதல், கட்டிடம் மற்றும் காணிகளுக்கான பெயர் மாற்றம் செய்தல் போன்ற பல சேவைகள் உட்பட வைத்திய முகாமும் நடைபெற்றது.
எதிர்வரும் தினங்களில் தொடர்ந்தும் இச்சேவையை வட்டார ரீதியாக, புத்தளம் நகர சபை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Urban Council Puttalam-




















0 Comments