Subscribe Us

header ads

சர்வதேச மட்டத்தில் நடத்திய கவிதைப் போட்டியில் இரண்டாவது இடத்தைப்பெற்று கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும் பெறுகின்றார்- நுஸ்ரி இப்னு ரஹ்மதுல்லாஹ்


தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு ஆகஸ்ட்     மாதம் சர்வதேச மட்டத்தில் நடத்திய கவிதைப் போட்டியில் இரண்டாவது இடத்தைப்பெற்று     கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும் பெறுகின்றார் - நுஸ்ரி இப்னு ரஹ்மதுல்லாஹ்

அநீதிக் கொலை

மிதமாய் விடிந்த காலை
மிதியாய் வந்து விழுமென்று
யார் தான் எண்ணியிருப்பார்கள்
கடைசித் தருணம் வரையும்
குற்றவாளியை கண்டு பிடிக்கச் சொன்ன
உத்தம புருஷனின் உயிர்
தொண்டைக் குழியில் இறுகி
விண்ணை நாடிச் செல்கிறது
யாக்கூப் மேனன்...
சரணடைந்த கூடுகளே
விழுங்கிக் கொண்ட அநியாயம்
தாடி வளர்ந்த முகத்தில்
முத்தமிட்டு உங்களை
வழியனுப்பி வைக்க வேண்டுமென
ஆசையாயிருந்தது
சட்டப் புத்தகத்தில்
எலி கொரித்த பக்கங்கள்
நீதியை மறைத்துவிட்டு
அநீதியை தேடித் திரியும்
அக்கிரமக் கூட்டத்தில்
நீ தெரியாமல் சிக்கிக் கொண்டீர்
கவலை கொள்ளாதீர் நண்பா..
அநியாயமிழைத்தவரெல்லாம்
ஆடிக் களைக்கும் நாள் வரும்
அன்று அவர்கள் மானங்கள்
கம்பமேறி நா தள்ளி சாவர்
அதைப் பார்த்து நீங்கள்
பரிதவிக்கக் கூடதென்று தான்
இறைவன் உங்கள் உயிரை
வாங்கிக் கொள்ள கொஞ்சம்
அவசரப் பட்டான்
சுவனத்துப் பூஞ்சோலையில்
காலாற நடந்து திரியுங்கள்
குயில் பாட்டுக் கேட்டு
மனதை அமைதிப் படுத்துங்கள்
மீழுமிடம் அங்கே தான்.

Post a Comment

0 Comments