பிரதீப் எக்னலிகொடவின் சம்பவத்தை முன்னிருத்தி இந்த நாட்டின் புலனாய்வுத் துறையை தாரைவார்க்க வேண்டாம் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்துள்ளர்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க காலத்தில் 2002 ஆம் ஆண்டு இதேபோன்று மிலேனியம் சிட்டி சம்பவம் தொடர்பில் புலனாய்வுத் துறையினர் குற்றம் சாட்டப்பட்டார்கள். இதனால், நாட்டின் புலனாய்வுப் பிரிவு பாரிய வீழ்ச்சியைச் சந்தித்ததுடன், அத்துறையைச் சேர்ந்த பலர் கொலை செய்யப்படவும் இது காரணமாகியது.
புலனாய்வுத் துறையை வெளிப்படுத்துவதன் மூலம் தேசிய பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க நேரிடும். தமிழ் பிரிவினைவாதமும், ஐ.எஸ். பயங்கரவாதமும் ஊடுருவ புலனாய்வுத் துறை செயலிழந்து செல்வது வழிவகுக்கும் எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.


0 Comments