கடற்கரை சூழலை தூய்மைப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றது.
"கடலை பாதுகாப்போம் நாமும் பாதுகாப்பாய் இருப்போம்" என்ற தொனிப்பொருளில் அமைந்த தேசிய வேலைத்திட்டத்தை கடற்கரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் இணைந்து இந் நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
கடற்கரையைச் சூழவுள்ள பகுதிகள் மாசடைவதை தடுப்பதற்கு உடனடித் தீர்வொன்றை வழங்கும் வகையில் கடற்கரைப் பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


0 Comments