மாணவர்களின் கல்வி தொடர்பான புதிய கொள்கை ஒன்றை இன்று (17) வெளியிடவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் கல்வி அமைச்சில் நடைபெறும் இந்நிகழ்வில், கல்வி அமைச்சின் செயலாளர் டப்ளியு.எம்.பந்துசேன, மேலதிக செயலாளர்கள், தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதி பணிப்பாளர் நாயகங்கள், பணிப்பாளர்கள் உட்பட கல்வி, தொழில் மற்றும் வியாபார துறைகளை சார்ந்த பல சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments