ஹங்கேரி பொலிஸார் அகதிகளின் மீது நடத்திய கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாக்குல் குறித்து ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
சிரியாவிலிருந்து இடம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரி படையெடுத்த அகதிகள் மீதே நேற்று (16) ஹங்கேரி பொலிஸார் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஹங்கேரி, சேர்பியா எல்லையில் வைத்தே ஹங்கேரி பொலிஸார் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அகதிகளில் பெரும்பாலானவர்கள் ஜெர்மனியில் தஞ்சம் புகும் நோக்கில் சென்றவர்கள் என்றும் இதன்போது பொலிஸாருக்கும் அகதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 20 பொலிஸார் காயமடைந்தனர் என்றும் இத்தாக்குதலின் போது இடம்பெயர்ந்தோர் சிறுவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தினர் என்றும் பிபிஸி செய்தி வெளியிட்டுள்ளது.


0 Comments