லண்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஸ்ரீ லங்கன் எயர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான யூ.எல். 504 ரக பயணிகள் விமானம் அவசரமாக ஹம்பாந்தோட்டை மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறித்த விமானம் தரையிறங்க திட்டமிட்டிருந்த போதிலும் அங்கு நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை பிற்பகல் 2.20 அளவில் மத்தள விமான நிலையத்தில் குறித்த விமானம் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


0 Comments