நாம் சுத்தம் என்கிற பெயரில் நமது படுக்கையை தூங்கி எழுந்தவுடன் சரிசெய்வது, நமது உடலில் இருந்து சிந்திச் சிதறும் செல்களை உண்ணும் நுண்ணுயிரிக்கு பாதுகாப்பானது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனின் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஸ்டீபன் ப்ரெடோல்வ் என்ற ஆராய்ச்சியாளர் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்த நுண்ணுயிர்கள் வளர்வதால் நமது உடலில் அலர்ஜிக்களும், ஆஸ்துமாவும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு படுக்கையிலும், சுமார் ஒன்றரை லட்சம் நுண்ணுயிர்கள் நமது வியர்வை நிரம்பிய உடல் செல்களுக்காக ஒவ்வொரு இரவும் காத்துக்கிடக்குமாம். இந்த படுக்கைகளை நாம் சரிசெய்யவில்லை என்றால் அவை சுத்தமான காற்று மற்றும் ஒளியால் பாதிப்புக்கு உள்ளாகி அப்படியே உயிரை விட்டுவிடும்.
படுக்கையை சீராக்கி வைத்துப் போனால் நுண்ணுயிர்கள் நமது செல்களை நன்றாக உட்கொண்டு மேலும் வளர்ச்சியடையும். ஆகவே, சோம்பேறித்தனமாக படுக்கையைக் கூட சரி செய்வதில்லை என யாராவது உங்களை புகார் கூறினால் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளிலிருந்து என்னைக் காத்துக்கொள்ளும் தற்காப்புக் கலை இது என தைரியமாக சொல்லுங்கள்.
நமது வீட்டில் சூரிய வெளிச்சம் கொஞ்சமாவது பட்டால்தான் இந்தப் பலன் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!
0 Comments