Subscribe Us

header ads

பாலமுனை அல் ஈமானியா அரபுக் கல்லூரியில் விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு

அபு அலா –


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 15வது ஞாககார்த்த தின நிகழ்வு நேற்றிரவு (16) பாலமுனை அல் – ஈமானியா அரபுக் கல்லூரியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாலமுனை மத்திய குழுவின் முன்னாள் செயலாளரும், ஈமானியா அரபுக் கல்லூரியின் நிருவாக சபை உறுப்பினர் எம்.ஏ.சதாத் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி ஏ.எல்.சாஜத் ஹூசைன் தலைமையில் அல் – ஈமானியா அரபுக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி ஏ.எல்.சாஜத் ஹூசைன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாலமுனை மத்திய குழுவின் முன்னாள் செயலாளரும், ஈமானியா அரபுக் கல்லூரியின் நிருவாக சபை உறுப்பினர் எம்.ஏ.சதாத் ஆகியோரினால் மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் கடந்தகால செயற்பாடுகள் பற்றி உரை நிகழ்த்தப்பட்டது.

கல்லூரியின் மாணவர்கள் மற்றும் உலமாக்களினால் கத்தமுல் குர்ஆன் தமாமும், மௌலவி ஏ.எல்.சாஜத் ஹூசைனினால் விஷேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அல் – ஈமானியா அரபுக் கல்லூரியின் நிருவாக சபைத்தலைவரும் ஓய்பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.சாகுல் ஹமிட், பாலமுனை ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் ஓய்பெற்ற தபால் அதிபர் யூ.எல்.எம்.அபுவக்கர், கல்லூரியின் மௌலவிகளான ரீ.நிஸ்தார், ஐ.தில்சாத், எம்.ஐ.மாஹிர், எம்.முஜிப் மற்றும் கல்விமான்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.





Post a Comment

0 Comments