அபு அலா –
முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்த உத்தம மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 15வது ஞாககார்த்த தின நிகழ்வு நேற்று (16) அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றது.
வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்தியசாலையின் தொற்றா நோய் பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் நப்தா, வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றும் டாக்டர்களான நைரோஸா, யூசுப் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் உரையாற்றுகையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்எம்.அஷ்ரப் என்பவர் தமிழ் பேசும் மக்களுக்காக பாராளுமன்றத்தில் 10 மணித்தியாலங்கள் மும்மொழிகளிலும் குரல் கொடுத்து இன்றுவரை சாதனை நிலைநாட்டிய ஒருவர் என்றால் அது மர்ஹூம் எம்.எச்எம்.அஷ்ரப் என்றுதான் சொல்லமுடியும். இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் சாதனை படைத்த மாமனிதரின் ஞாபகார்த்த தினமாகும்.
மர்ஹூம் எம்.எச்எம்.அஷ்ரப் என்ற மாமனிதரைப் பற்றி இன்று எமது நாட்டின் பல்வேறு இடங்களில் நினைவு கூறப்படுகின்றது. இவரின் நற்செயலினை பாராட்டியும் அவருக்காக குர்ஆன் ஓதி தமாம் செய்யும் நிகழ்வும், விஷேட துஆப் பிரார்த்தனைகளும் இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. என அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.






0 Comments