இலங்கை அணி தனது சொந்த மைதானத்தில் பாகிஸ்தான் (2-1), இந்தியா (2-1) அணிகளிடம் அடுத்தடுத்து தொடரை இழந்தது. இதனால் கடும் விமர்சனத்திற்குள்ளான தலைமை பயிற்சியாளர் மார்வன் அட்டப்பட்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதனால் அந்த அணிக்கு ஜெரோம் ஜெயரத்னே இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறது. அதற்காக இலங்கை வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிய கண்டத்தில் உள்ள கிரிக்கெட் அணிகளில் இலங்கைதான் மிகவும் மோசமாக பீல்டிங் செய்கிறது என்று ஜெயரத்னே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘ஆசியாவிலேயே நாங்கள்தான் தற்போது மிகவும் மோசமாக பீல்டிங் செய்யும் அணியாக இருக்கிறோம். நாங்கள் ஒருபோதும் பாகிஸ்தானுக்குப் பின்னால் இருந்ததில்லை. ஆனால், தற்போது அவர்களுக்கு பின்னால் சென்றுள்ளோம். இந்தியா எங்களை விட திறமையானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். அதேபோல் வங்காளதேச வீரர்களும் எங்களை விட சிறப்பாக பீல்டிங் செய்கின்றனர்’’ என்றார்.


0 Comments