இஸ்லாம் இன்று ஒரு தீவிரவாதத்தினைப் போதிக்கும் மதம் போன்றே ஏனைய மதத்தினரிடையே சித்தரிக்கப்பட்டுள்ளது.மக் கா ஹரம் ஷரீபில் பாரம் தூக்கி விபத்தில் ஹஜ் கிரிகையினை மேற்கொள்ளச் சென்ற 127 இற்கும் மேற்பட்டோர் அல்லாஹ்வின் பாதையில் மரணமடைந்தனர்.இதனை உலகம் பூராகவும் உள்ள மக்கள் இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு மனிதாபிமான ரீதியில் மிகவும் ஆழ்ந்த கவலையோடு நோக்கினர்.இருந்த போதிலும் இந்தியாவைச் சேர்ந்த வேல் முருகன் எனும் சகோதரர் இந் நிகழ்வினை ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வாக நோக்கி அதனை தனது முகப் புத்தகத்தில் பதிவேற்றி இருந்தார்.இவரிற்கு பின்னூட்டம் அளித்திருந்த சிலரும் இதனை மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக நோக்கி இருந்ததை அவதானிக்க முடிந்தது.மரணத்தில் மகிழும் ஒரு மனிதனை விட உலகில் கேவலமானவன் யாருமே இருக்க மாட்டான்.
இவர் தனது பதிவில் அங்கு மரணித்திருந்தவர்களினை தீவிர வாதிகளாக சித்தரித்து தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி இருந்ததே இங்கு கவனத்தில் எடுக்க வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.இவரது மகிழ்ச்சிப் பிரவாகத்திற்கு இவர் என்ன தான் நியாயத்தினைக் காட்ட முனைந்தாலும்? முஸ்லிம்கள் அழிந்தால் இஸ்லாம் அழிந்துவிடும்.பின்னர் தங்கள் மதத்தினை எதுவித சவலுமின்றி முன்னெடுக்கலாம் எனும் நோக்கமே பிரதான காரணம் எனலாம்.ஒரு இனத்தினை அழித்து தன் மதத்தினை நிலைக்கச் செய்ய இன்று மட்டுமல்ல நபிகளார் வாழ்ந்த காலத்திலும் முயன்றதற்கு பல வரலாற்றுச் சான்றுகளினைக் காட்டலாம்.அன்றும் இன்றும் முஸ்லிம்கள் ஒரே நோக்கத்திற்காகவே அழிக்கப்படுகின்ற போதும் எதிரிகளால் முன் வைக்கப்படும் காரணங்கள் வேறு படுகின்றன.
அன்று நபியவர்களினை அழிக்க வந்தவர்கள் நேரடியாக இஸ்லாத்தினை அழித்து தங்கள் மதத்தினை நிலைக்கச் செய்யவே வருகிறார்கள் என்பது வெளிப்படையானது.அன்று மக்கள் மனதில் மத வெறி மிகவும் வேரூன்றி இருந்ததன் காரணமாக எதிரிகள் அவர்களுக்குக் தேவையான மக்கள் பலத்தினைத் திரட்டிக் கொண்டார்கள்.இன்று மத வெறியினை விதையாக்கி விரூட்சகமாக்க முனைய முடியாது.இஸ்லாத்தினை அழிக்க முஸ்லிம்களினை அழிப்போம் வாருங்கள் என எங்கு அறை கூவல் விட்டாலும் அதற்கு பதில் அளிப்போரினை விட எதிர்ப்பவர்களினையே அதிகம் பெறலாம்.இதனால் நேரடியாக இஸ்லாத்தினை இல்லாதொழிக்க முஸ்லிம்களினை கொன்று குவிப்போம் எனக் கூறிக் கொண்டு யாரினாலும் வெற்றி பெற முடியாது.இதற்கு இன வாதத்தினை ஆடையாக அணிந்து மக்கள் மத்தியில் வெளிப்பட்ட பொது பல சேனா இத் தேர்தலில் மிகக் குறுகிய வாக்குகளுக்குள் முடக்கப்பட்டதனை ஆதாரமாக முன் வைக்கலாம்.
இவ்வாறான சூழ் நிலையில் முஸ்லிம்களினை கருவறுக்க இன்று முஸ்லிம்களுக்கு தீவிர வாத முலாமிட்டுள்ளார்கள்.செப்டம ்பர் என்றாலே அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம்,பென்டகன் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களே நினைவுக்கு வரும்.இந்தத் தாக்குதலினை காரணம் காட்டியே அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்தது.பல இலட்சக் கணக்கான முஸ்லிம்களினையும் கொன்று குவித்தார்கள்.அல் குவைதா இயக்கம் தான் இதனைச் செய்தது என்பதற்கு எது வித சான்றுகளும் இல்லை.முஸ்லிம்கள் மீது இப் பழி போடப்பட்டதால் சர்வதேசமும் கை கட்டி வேடிக்கை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.இவ்வாறே ஈராக்கிலும் அமெரிக்க மிகக் கொடூரமான மனித உருமை மீறல்களினைச் செய்தது.அமெரிக்காவின் மனித உரிமை மீறல்களுக்கான பல ஆதாரங்கள் கைகளில் மிதக்கின்ற போதும் அதனைத் தட்டிக் கேட்கும் மனித உரிமை ஆர்வலர்கள் யாருமே இல்லை.மியன்மாரிலே சிங்கள பேரின வாதிகளினால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போதும் அதனைத் தட்டிக் கேட்க மனித உரிமை ஆர்வலர்கள் யாருமே இல்லை.
ஆப்கானிஸ்தான்,ஈராக்,மியன்ம ார் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ள இலங்கையில் மனித உரிமை மீறலுக்கான நடவடிக்கை கோரி எத்தனை மனித உரிமை ஆர்வலர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளார்கள்.இவர்கள் ஏன்? முஸ்லிம்களுக்கும் தூக்கவில்லை என்பதே இங்கே எழும் வினா.அமெரிக்காவினை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதால் ஆப்கானிஸ்தான்,ஈராக்கினை விடுவோம் இனச் சுத்திகரிப்பு நடைபெற்ற மியன்மாரிற்காவது மனித உருமை ஆர்வலர்கள் கை தூக்கி இருக்கலாமே? மனிதாபிமானம் கொண்டவர்கள் உலகில் இல்லை என்பதற்கில்லை நிறையவே இருக்கின்றார்கள்.ஆனால்,முஸ ்லிம்களுக்கென்றால் இல்லை என்பதே கசப்பான உண்மை.
ஏன் இந்த நிலை..??
இன்று மனித உரிமை ஆர்வலர்களும் முஸ்லிம்களின் மீது தீவிரவாத முலாமிடப்பட்டுள்ளதால் முஸ்லிம்களினை தீவிரவாதிகளாகவே பார்க்கின்றார்கள் என்பதே கசப்பான உண்மை.தீவிரவாதிகளுக்கு யாருமே உதவ மாட்டார்கள் அல்லவா?
இன்று முஸ்லிம்களினை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில் எந்த நாடு அமைதியாக உள்ளது? ஈராக்,ஆப்கானிஸ்தான்,சிரியா ,ஜோர்தான்,லிபியா போன்ற நாடுகளில் எதிரிகள் முஸ்லிம்களினை அழிப்பதை விட முஸ்லிம்களுக்கிடையிலான மோதல்களினால் மரணிக்கும் முஸ்லிம்களே அதிகம்.சுன்னி,சீயா முஸ்லிம் பிரிவுகளுக்குள் எத்தனை மோதல்? .ஒரு இஸ்லாமிய நிகழ்வில் ஒரு கருத்து கூறப்பாட்டால் அதில் எத்தனை முரண்பாடுகள்? எத்தனை பிரச்சனைகள்? இப்படி முஸ்லிம்களுக்குள் ஒரு நாளைக்கு ஓராயிரம் பிரச்சனைகளும்,மரணங்களும் நிகழும் போது முஸ்லிம்கள் தீவிர வாதிகள் என்று கூறினால் இதனை நோக்குபவர்கள் மாற்றுக் கருத்தின்றி நம்புவார்களா இல்லையா?
மக்கா ஹரம் ஷரீபில் இடம்பெற்ற மரணத்தினை சந்தோச நிகழ்வாக கருதிய வேல் முருகன் இனத் துவேசங்களினை கக்கும் BJP காரர்.இவர்கள் முஸ்லிம்களினை அழிக்கும் எண்ணத் தோடு அலைபவர்கள்.இவ்வாறான நிகழ்வு அவர்களுக்கு மகிழ்வினை அழிப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல.வேல் முருகன் போன்றவர்கள் மக்கா நிகழ்வில் தீவிரவாதிகள் தான் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு நாம் தான் ஒரு சிறந்த காரணத்தினை வழங்கியுள்ளோம் என்பதே முஸ்லிம்கள் மீதுள்ள குற்றச்சாட்டாகும்.அதாவது முஸ்லிம்களின் எதிரிகள் தீவிரவாதப் பாடல் படும் போது முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கிடையில் சண்டை போடுவதானது பக்க வாத்தியம் வாசிப்பது போன்றாகும்.ஒரு பாடலுக்கு வாசிக்கப்படும் பக்க வாத்தியங்களே அப் பாடலினை உயிரோட்டமுள்ளதாக மாற்றும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
(akmhqhaq@gmail.com)
சம்மாந்துறை
**mHq**


0 Comments