Subscribe Us

header ads

சூரிய ஒளி படும்படி சுற்றித்திரிவது, கண்ணாடி அணிவதிலிருந்து காப்பாற்றும்!



கண் பார்வை குறைபாடு மற்றும் தலைவலிக்காக கண்ணாடி அணிவதிலிருந்து தப்பிக்க சிறுவர், சிறுமியர் தினந்தோறும் 40 நிமிடம் சூரிய ஒளி படும்படி விளையாடினால் போதும், என்கின்றனர் சீன ஆராய்ச்சியாளர்கள்.

வீடு மற்றும் அறைகளுக்குள்ளேயே பொழுதைக் கழிக்கும்போது, சூரிய ஒளியின் ஒரு ஒளிக்கற்றைக்கூட நம் உடல் மீது படுவதில்லை. ஆனால், நாற்பது நிமிடமாவது சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நம்மீது படவேண்டுமாம். இல்லையென்றால், நம் கண்களுக்கு மையோபியா என்ற பாதிப்பு உண்டாகும். இதனால், அறுவை சிகிச்சையோ, கண்ணாடியோ இன்றி தொலைவில் இருக்கும் பொருட்களை தெளிவாக பார்க்க முடியாமல் போகலாம். மேலும், கிட்டப்பார்வை பிரச்சனையும் ஏற்படும்!

சீனாவின் சன் யாட் சென் பல்கலைக்கழகத்தின் மருத்துவர் மின்ங்குவாங் ஹி என்பவர் தலைமையில், குழந்தைகள் வெளியில் விளையாடாமல் இருப்பதால் உண்டாகும் பாதிப்புகள் தொடர்பான இந்த ஆய்வை, காங்சாவ் நகரில் உள்ள பன்னிரண்டு பள்ளிகளில் படிக்கும், ஆறு வயது குழந்தைகளிடம் மேற்கொண்டனர். சுமார், ஆயிரத்து தொள்ளாயிரம் பேரை கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை இந்தக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்தனர். 

இந்த காலகட்டத்தில் இவர்களில் பாதி குழந்தைகள் வெயிலில் தினந்தோறும் 40 நிமிடத்துக்கு விளையாடவோ, திறந்தவெளி வகுப்புகளில் கலந்துகொள்ளவோ அறிவுறித்தப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவில் வெயிலில் விளையாடிய குழந்தைகளில் ஒன்பது சதவிகிதம் பேர், கிட்டப்பார்வை பிரச்சனை ஏற்படாமல் தப்பித்ததாக தெரியவந்துள்ளது.

ஆகவே, மையோபியாவிலிருந்து தப்பிக்க, குறிப்பிட்ட அளவு புற ஊதாக் கதிர்கள் குழந்தைகள் மீது படும்படி சுமார் 40 நிமிடமாவது அவர்களை வெளியில் சுற்றித் திரிய அனுமதிக்க வேண்டும் என இந்த ஆய்வுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments