Subscribe Us

header ads

கூகுலினால் தரம் 5 பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு புள்ளி


புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கூகுல் தகவலினால் புள்ளியொன்று பெறும் வாய்ப்புக் கிட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் தரம் 5 வினாப் பத்திரத்தில் ஸ்ரீ பாத புனிதஸ்தலம் அமைந்துள்ள பிரதேசம் எந்த மாகாணத்துக்குரியது? என வினவப்பட்டிருந்தது.
இதற்கு மாணவர்கள் சப்ரகமுவ எனவும் மத்திய மாகாணம் எனவும் இருவாறு விடையளித்துள்ளனர். கூகுல் வரைபடத்தின் படி அது மத்திய மாகாணத்துக்குரியதாகவும், அளவைத் திணைக்களத்தின் படி அது சப்ரகமுவ மாகாணத்துக்குரியது எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விசனம் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பரீட்சைகள் திணைக்களம், இரு விடைகளை  எழுதிய மாணவர்களுக்கும் புள்ளிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

Post a Comment

0 Comments