Subscribe Us

header ads

தேசிய ஷூறா சபையின் உழ்ஹிய்யா வழிகாட்டல் – 2015


இஸ்லாத்தில் உழ்ஹிய்யாவின் முக்கியத்துவம்நன்மைகள்அது தொடர்பான்  மார்க்க சட்ட திட்டங்கள் என்பவற்றை  தற்போது உலமாக்கள் வழங்கி வருகின்றனர்.அவை தொடர்பான மேலதிக விபரங்களை அவர்களை அணுகி அறிந்து கொள்ள முடியும். என்றாலும் நாட்டின் நிலவரங்கள், நாம் வாழுகின்ற சூழல் என்பவற்றைக் கருத்திற் கொண்டு உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பாக தேசிய ஷூரா சபை கீழ் காணும் வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றது :
    1. உழ்ஹிய்யாவை நாட்டின் சட்ட-விதிமுறைகளுக்கமையசமூக நால்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டு இலங்கை முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டும்.
    2. ஆடுமாடு ஆகியவற்றை உழ்ஹிய்யாவாகக் கொடுக்க முடியுமாக இருந்தாலும் ஆடுகளைக்  கொடுப்பதே விரும்பத்தக்கதாகும்.
    3. உழ்ஹிய்யா நடைமுறையானது  நாட்டின் அனைத்து முஸ்லிம்களும் ஏழை-பணக்கார விதியாசமின்றி ஈத்பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடுவதற்கு வழிவகுக்கிறது. மேலும்இதன் மூலம் நாட்டின் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தேசிய விவசாயிகளும் கூடிய நன்மை பெறுவார்கள். வருடாந்த உழ்ஹிய்யா நடவடிக்கை மூலம்சுமார் 250 மில்லியன் ரூபா தேசிய உள்நாட்டு உற்பத்திக்கும்உள்நாட்டு விவசாயிகளுக்கும் கிடைக்கப்பெறுகின்றது (மதிப்பீடு 2013).
    4. விலங்குகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது (பின்வரும் விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியுள்ளது
              1. ஆடு/மாடுகளை வாங்கும் போது கிராம உத்தியோகத்தரினால்(மிருகத்தின் உரிமை அத்தாட்சிப்படுத்தப்படல் வேண்டும்.
      1. மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதியை (Transport Permit) பிரதேச செயலகத்தில் (DS Office) பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும்.
      2. மேற்குறிப்பிட்ட சான்றிதழ்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை விலங்குகளின் உரிமையாளரை முதன்மைப்படுத்தி அவர் மூலம் பெற்றுக்கொள்வது மிகப் பொருத்தமானதாகும்.
      3. மிருகங்களை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும்.   அரசாங்க வர்த்தமானியின் படி விலங்குகளை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவு:
       விலங்கின் வகைநிறை (Kg)
      அதிகூடிய எண்ணிக்கையான
      விலங்குகள் /சதுர மீற்றருக்கு
      மாடு / எருமை40க்கு குறைந்த5
      60க்கு குறைந்த4
      70க்கு குறைந்த3
      200க்கு குறைந்த1
      400க்கு குறைந்த1
      500க்கு குறைந்த0.8
      வெள்ளாடு செம்மறி ஆடு20க்கு குறைந்த6
      30க்குகுறைந்த5
      40க்கு குறைந்த4
      70க்குகுறைந்த3
      (இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானிப் பத்திரிகை (அதி விசேஷட) இல. 1629/17 - 2009.11.26)
    5. குர்பான் செய்வதற்குப் பொருத்தமான இடம்நேரம் என்பவற்றை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யா செய்யப்படும் இடம் மறைவானதாக இருப்பது மிகவும் அவசியமாகும்.
      1. குர்பான் தொடர்பான விளம்பரங்களை பொது ஊடகங்களில் பிரசுரிப்பதைத் தவிர்த்துக் கொள்வதுடன்தத்தமது மஹல்லாக்களை மையப்படுத்தி பிரதேச சூழலுக்கு ஏற்ப பொது மஷூறாவின் அடிப்படையில் உழ்ஹிய்யா விடயங்களை முன்னெடுப்பது சிறந்தது.
    6. பள்ளிவாசல் வளவுகளுக்குள் குர்பான் செய்யவதைத்தவிர்ந்து கொள்வது சிறந்தது. ஒரே இடத்தில் அதிகளவிலான விலங்குககளை குர்பான் செய்வதைத் தவிர்த்து அதற்குப் பதிலாக பொருத்தமான பல இடங்களைத் தெரிவு செய்து அங்கு குர்பான் நடவடிக்கைகளைச் செய்வது விரும்பத்தக்கதாகும்.
      1.  
      2. பிரதேச உள்ளூராட்சி மன்ற (மாநகர / நகர/ பிரதேச சபை) மிருக வைத்தியரை சந்தித்து குர்பானிக்கான உரிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
    7. மிருக வைத்தியர்/ உள்ளூராட்சி சபையின் உரிய அதிகாரியினால் உழ்ஹிய்யா செய்யும் இடத்தைப் பார்வையிட உரிமை உண்டு.
    8. குர்பான் செய்யாப்பட்ட பின் விலங்குகளின் கழிவுகளை (எலும்புகால்இரத்தம்சாணம்தோல் என்பவற்றை)மிகவும் பொறுப்புணர்வுடன்உரிய முறையில் பூமியின் ஆழத்தில் புதைப்பது மிகவும் அவசியமாகும்.
    9. குர்பான் பங்கீட்டின்போது ஒழுங்கு முறைப்படியும்சாணக்கியமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
    10. போயா தினத்தில் (செப்டம்பர் 27) உழ்ஹிய்யா கொடுப்பதையும்பங்கிடுவதையும்,வாகனங்களில் வெளியூர்களுக்கு அனுப்புவதையும்  முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
    11. ஜீவகாருண்யத்தை பற்றியும் அயலவர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. உழ்ஹிய்யா கொடுக்கும் போது அவற்றை கருத்திற்கொள்ளுமாறு ஞாபகப்படுத்துகிறோம்
குறிப்பு: தேசிய ஷூறா சபையின் இணையத்தளமானwww.nationalshoora.com  இலிருந்து இவ் உழ்ஹிய்யா வழிகாட்டலைப் பெற்று  உங்கள் பிரதேச மஸ்ஜித்களுக்கும் கிடைக்கச் செய்யவும். இதனை ஜும்ஆ தொழுகையின் பின்னர் வாசித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் மஸ்ஜித்  அறிவித்தல் பலகையில் பிரசுரிக்கமாறு மஸ்ஜித் நிருவாகிகளை வேண்டிக்கொள்ளவும்.

Post a Comment

0 Comments