Subscribe Us

header ads

ரயிலில் பயணித்த போக்குவரத்து அமைச்சர்

போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா உடரட மெனிக்கே புகையிரதத்தில் கொழும்பில் இருந்து பதுளைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பயணத்தின் இடையில் ஹட்டன் புகையிரத நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போக்குவரத்து அமைச்சர், 
இந்த புகையிரதத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சிறந்த சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தற்போது காணப்படுகின்ற குறைநிறைகளை அறிந்து கொள்வதற்காக குறித்த புகையிரதத்தில் தான் பயணம் செய்ததாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
அத்தோடு குறைநிறைகளை இணங்கண்டுள்ளதாகவும் இதற்கு உரிய நடவடிக்கைகளை தான் சிறந்த முறையில் மேற்கொள்ள இருப்பதாகவும், பின்தங்கிய நிலையில் காணப்படும் புகையிரத சேவையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரித்தார்.
தற்போது கிடைத்திருக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சு தனக்கு சவால் இல்லை என்றும் இதற்கு முன்னர் பதவி வகித்த அமைச்சுக்களை சரிவர நிர்வகித்ததாகவும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த பயணத்தில் ரயில் திணைக்கள பொது முகாமையாளர் விஜே அமரதுங்க உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments