Subscribe Us

header ads

புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த சகோதரர்களுக்கு PPAF யின் வேண்டுகோள்


புலிகளால் விரட்டப்பட்டு புத்தளத்துக்கு வந்து சுமார் 25 வருடங்கள் கடந்தபோதும், இன்றும் நாம் ஒற்றுமையுடனும் சகோதர பாசத்துடனும் இரண்டறக் கலந்து வாழ்கின்றோம். 1990 இல் நீங்கள் புத்தளம் வந்தபோது அரசாங்கமும் அரச சார்பற்ற அமைப்புக்கள் எதுவும் உங்களுக்கு உதவமுன்னர் நாம் உதவிக்கரம் நீட்டியதை நீங்கள் நன்றி உணர்வுடன் சிலாகித்து பேசுவதும் அரசியல் வாதிகள் தமது மேடைகளில் முழங்குவதும் நன்றி பாராட்டுவதும் நாம் அறிந்ததே.

இங்கு வந்தபின் வன்னிக்கென்று நீங்கள் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றபோதும் நாம் அதனை இழந்து நிற்கின்றோம். இங்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் செறிந்து வாழ்வதனால்தான் அது சாத்தியமாயுள்ளது. எனவே புத்தள மண் அதற்கும் ஒருவகையில் உங்களுக்கு உதவி இருக்கின்றது.

நாம் புத்தளத்துக்கென்று ஒரு பாராளுமன்ற பிரதி நிதியை பெற்றுக்கொள்ள கடந்த காலங்களில் மேற்கொண்ட பெரும் முயற்சிகளையும் நீங்கள் அறிந்தே வைத்துள்ளீர்கள். இந்நிலையில் அதனை சிதைக்கும் வண்ணம் இன்று செயற்பாடுகள் நடப்பது கவலையளிக்கின்றது. நாம் என்றும் உங்களுக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் எம்மைப் பிரித்து ஆள நினைக்கும் அரசியல் தலைமைகளை எம்மால் ஏற்க முடியாது. நீங்கள் உங்களுக்கென யாரையாவது ஒரு பிரதிநிதியை தெரிவுசெய்வதில் நாம் தலையிடவில்லை - அது உங்கள் உரிமை.

ஆனால் புத்தளத்தில் வாக்காளர்களாக பதிவுசெய்திருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் எமது முயற்சிக்கு பங்கம் விளைவிக்காமல் எம்முடன் இணைந்து நீண்டநாள் முயற்சியால் உருவாக்கப்பட்ட PPAF அமைப்புக்கும் ஒட்டகம் சின்னத்துக்கும் வாக்களித்து உதவவேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Post a Comment

0 Comments