Subscribe Us

header ads

போதைப் பொருள் கடத்திய புறாவை 40 நாட்கள் கூண்டுக்குள் அடைக்க உத்தரவு



கோஸ்டா ரிகாவின் சன் ஜோசே லா ரிபார்மாபெனிடெண்டியாவில் உள்ள சிறைச்சாலைக்கு மேலே சிறமத்துடன் ஒரு புறா பறந்துச் சென்றதை போலீசார் கவனித்தனர். புறா எதோ ஒரு பையை தூக்கிச் செல்வது போல் இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த புறாவை கஷ்டப்பட்டு பிடித்தனர். புறாவை பிடித்து அந்த பையை சொதிதப் போது அந்த பையில் 14 கிராம் கொக்கையன் மற்றும் 14 கிராம் கஞ்சா ஆகியவை ஒரு சிறிய பேக்கில் வைத்து கட்டப்பட்டு இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சிறைத்துறை இயக்குனர் பவுல் பெர்டோஸி கூறியதாவது: இந்த புறாக்கள் நன்கு பழக்கப்பட்டு இது போல் போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்படுகிறது. இது போல பல புறாக்களை போதைப் பொருள் கடத்த பயன்படுத்தி இருக்கலாம். இந்த புறாவை யார் அனுப்பியது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த புறாவை 40 நாட்கள் கூண்டுக்குள் அடைத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments