தனது கன்னி பிரவேசத்தை கடந்த தேர்தலின் மூலம் ஆரம்பித்திருக்கும் எமது ஒட்டக சின்ன கட்சியான தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியானது நடைபெற போகும் உள்ளுராட்சி மன்றத்தில் அம்பாறை மாவட்டம் முழுவதும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணியின் சின்னமான யானை சின்னத்தில் போட்டியிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தனது ஆரம்ப படியாக ஆரம்பித்திருக்கும் இந்த பயணத்தை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுப்பது என்பது சம்பந்தமாக கூடிய தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் நிறைவேற்று சபையின் ஆலோசணைப்படி தமது பயணத்தை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து முன்னெடுக்க தீர்மானித்து அதற்காக ஐக்கிய தேசிய கட்சி முக்கிய புள்ளிகளின் ஊடாக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.
எமது கட்சியின் நேரடி பிரவேசத்தின் மூலம் எங்களது சிந்தனையில் உள்ள அபிவிருத்திகள் சகலவற்றையும் செயற்படுத்தி நாட்டின் வருமானத்தையும் இளம் சமுதாயத்தின் தொழில் வாய்ப்புக்களையும் செயத் படுத்திப்படுத்தி புதிய அரசியல் கலாச்சாரத்தை மேலோங்க செய்ய முடியும் என நம்புகிறோம்.
எங்களது அரசியல் பிரவேசம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் எனவும் நம்புகிறோம் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் கல்முனை பிரதேச விஸ்தரிப்பு செயலாளர் சபீர் முஹம்மட் தெரிவித்தார்.
-Noorul Hutha Umar-
0 Comments