சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற குமார் சங்கக்காரவை வெற்றியுடன் வழியனுப்ப முடியாமல் போனது கவலையாகத்தான் இருக்கிறது. ஆனால் அவருக்காக தொடரைக் கைப்பற்றி அந்த வெற்றியால் சங்காவை கௌரவிப்போம் என்று இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார் .
இந்திய –- இலங்கை அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியோடு சங்கக்கார சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். இந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவிக்கொண்டது. காலியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது. இன்னும் மீதமிருப்பது ஒரே ஒரு போட்டிதான்.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்று தொடரை நாம் வென்று வெற்றியை சங்காவுக்கு பரிசளிப் போம் என்று மெத்தி யூஸ் தெரிவித்தார்.
0 Comments