(எம்.எம்.ஜபீர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் திகாடுல்ல மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்த பிரதேச கிளைக் குழக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சவளக்கடை-மத்திமுகாம் மத்திய குழு ஏற்பாட்டில் இன்று 12 ஆம் கொளனி ஸாஹிரா முன்பள்ளி பாடசாலை கட்டிடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டம் சவளக்கடை- மத்திமுகாம் மத்திய குழவின் அமைப்பாளர் ஏ.சீ.நிஸார் ஹாஜி தலைமையில் நடைபெற்ற கூடடத்தில் முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர் எம்.ஐ.தஜாப்தீன், சவளக்கடை பிரதேசத்திக்கான மத்திய குழவின் தலைவர் ஏ.எல்.ஜலீல், மத்தியமுகாம் பிரதேசத்திக்கான மத்திய குழவின் தலைவர் ஏ.எம்.மஹ்ரூப், சவளக்கடை-மத்திமுகாம் மத்திய குழவின் செயலாளர் ஏ.நபாஸ், பொருளார் முகம்மட் அலி, கிளைக் குழக்களின் தலைவர்கள், பெருளார்கள், செயலாளர்கள், கட்சியின் போராளிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது விசேடமாக பிரதேசத்தின் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயப்பட்டன. இதனை ஒவ்வெரு கிராமத்திலும் அமைந்துள்ள கிளைக் குழக்கள் இனங்கண்டு மத்திய குழவிக்கு சமர்பிக்கப்பட்டு இதற்கான தீர்வுகளை பெற கட்சியின் தலைமையிடம் மகஜர் ஊடாக கையளிக்கப்படவுள்ளதாக சவளக்கடை- மத்திமுகாம் மத்திய குழவின் அமைப்பாளர் ஏ.சீ.நிஸார் ஹாஜி தெரிவித்தார்.
0 Comments