நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சட்ட மீறல்களில் ஈடுபட்டமை உறுதியான அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலயகத்திற்கு கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றில் சட்ட மீறல்களில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும்.
தேர்தல் சட்டங்களை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர்களில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களைப் போன்றே வெற்றியீட்டியவர்களின் பெயர்களும் உள்ளடங்குகின்றது.
நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு வழங்கிய சம்பவங்கள் தொடாபில் 214 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்கள் காட்சிப்படுத்தப்பட்டமை குறித்து 334 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை குறித்து 171 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் கூட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தியமை தொடர்பில் 239 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரச உத்தியோகத்தர்கள் அரசியலில் ஈடுபட்டமை குறித்து 198 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமைச்சு செயலாளர்கள் இருவர் மேலதிக செயலாளர் ஒருவர் உள்ளிட்ட பல்வேறு அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் சட்டங்களை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
ஊழல் சம்பவங்களில் குற்றவாளியாகி உயர் நீதிமன்றில் தண்டிக்கப்படும் அனைத்து நபர்களும் ஏழு ஆண்டுகள் வாக்களிக்க முடியாது.
வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தால் அவரது உறுப்புரிமை ரத்தாகும் என தேர்தல் ஆணையாளர் கொழும்பு ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.


0 Comments