பிரதி அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் பதவி வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நாடாளுமன்றிற்கு தெரிவாகியுள்ள பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நான் இந்த அமைச்சுப் பதவிக்குதான் விருப்பம் என்றெல்லாம் இல்லை.
எந்தவொரு துறையிலும் கடமையாற்றுவதற்கு என்னால் முடியும்.
பிரதி அல்லது இராஜாங்க அமைச்சு இல்லாத நல்லதொரு அமைச்சு புத்தளம் மாவட்டத்திற்கு கிடைக்கும் என நான் நினைக்கின்றேன்.
நாம் மாவட்டத்தை வெற்றியடைச் செய்துள்ளோம், மக்கள் என்னை சிறந்த முறையில் வெற்றியடைச் செய்துள்ளனர். எனவே நல்லதொரு பதவி கிடைக்கும் என நான் கருதுகின்றேன்.
அந்த அமைச்சின் ஊடாக மக்களுக்கு சேவையாற்ற முடியும் என பாலித ரங்கே பண்டார கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எவ்வாறான அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஏற்றுக்கொள்வீர்கள் என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.


0 Comments