இந்த எழுத்து மிகச்சிலருக்கு சிலபோது வலிக்கக்கூடும், தங்கள் இலக்கிற்கான சவாலாக பார்க்கப் படக் கூடும்.. எனினும் எழுதுகிறேன்..
புத்தளம் சமூகம்..., எமது ஊரின் எதிர்காலம்... கருதி எழுதுகிறேன்... இதனை கட்டாயம் அமுல்படுத்துமாறு சம்பந்தப் பட்ட சகோதரர்களை வேண்டிக்கொள்கிறேன்...
அண்மைக்காலமாக நாம் கருத்துப் பரிமாறும் எமது முக்கிய குழுமங்களான Puttalam Politics / Puttalam Times / Puttalam Buddis களில் அதிகமான fake Profile கள் திட்டமிடப்பட்ட அடிப்படையில் முளைத்துவருவதை அவதானிக்க முடிகிறது..
தனது சொந்த நலனுக்காக சில அரசியல் வாதிகளின் அறப் போர்(?) கருவிகளாகவே அவை பெரும்பாலும் அமைந்திருக்கிறது !!
அந்த விஷச் செடிகள் முகமூடிகளுக்கு பின்னால் இருந்து கொண்டு மெது மெதுவாக விஷத்தை தூவி எமது சமூகத்தை குறிப்பாக இளைஞர்களை நச்சுக் குழிகளை நோக்கி நகர்த்திச் செல்வதை காணமுடிகிறது...
ஒவ்வொரு post இலும் ஒவ்வொரு விஷம்..!
ஹராம் ஆன சிந்தனைகளை கூட ஹலால் ஆக சித்தரிக்கும் நய வஞ்சக வடிவங்கள்.. emotional touch கள்..!!
போலி விமர்சனங்கள்..!! கற்பனை கயிறு திரிப்புகள்...!! ஒன்றை ஒன்பதாக்கும் ஊளைச் சத்தங்கள்...!!
சிலபோது பொய்கள் இங்கே நிஜத்தை மீரிவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது...!!
இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...
இவர்கள் யார் என்று தெரியாது.. எந்த மதம் என்பது தெரியாது... என்ன விலைக்கு எழுதுகிறார்கள் என்று தெரியாது...!
ஆனால் தெளிவாகத் தெரிவது ஒன்றுதான், இது தொடர்ந்தாள் இந்த முக மூடிகளின் முயற்சி கூடிய சீக்கிரம் புத்தளத்தில் ரத்தம் தெழிக்கும்..!! அநியாய கொலைகளையும், அனாதைகளையும் சந்திக்கச் செய்யும்...!!
கடந்த மாதம் கல்குடா தொகுதியில் கேட்ட வெடிச்சத்தமும்... அந்த அனாதைக் குழந்தைகளின் "வாப்பா.. வாப்பா.. எனக்கு ஏலா.." என்ற நெஞ்சு சுடும் கண்ணீரும்.. விதவையின் விம்மலும் கூட புத்தளத்தைத் தொடும்..!! பல பாவங்கள் பரீட்சிக்கப் படும்..!!
குரோத உற்பத்தியில் குளிர்காய்வது அரசியல் வாதிகளின் மரபு !
அவர்களின் வாழ்வுக்காக காலத்திற்கு காலம் விரோதிகள் தேவைப்படுகிறது...!! அவர்களின் ஏணியை சாத்த ஒரு மதில் தேவைப் படுகிறது!!!
face book இல் இருந்து ஆரம்பிக்கிறார்கள்,,, Fake குகள் உருவாக்கப்படுகிறார்கள்! முகத்துக்கு முன்னாள் பேச முடியாததை இந்த முண்டங்களை வைத்துப் பேசுகிறார்கள்..!!
பரிதாபம்... சராசரி இளைஞர் களின் கண்ணில், இந்த திரைப்படம் விளங்குவதில்லை..! இயக்குனரின் சம்பளம் தெரிவதில்லை..!!
இரண்டரை மணி நேரத்தின் பின் இந்தக் கதா பாத்திரங்கள் கலையப்போவதும் புரியப் படுவதில்லை..!!
அழுக்கை சுரகின்ற.. அழுக்கை சுவைக்கின்ற ஒரு களத்தில் ஊர் நிர்பந்தமாய் வீசப்படுகிறது...!! நிறுத்தப்பட வேண்டும்...
Fake களின் எழுத்துக்கு உணர்ச்சிவசப்படுவதும், அந்தக் கற்பில்லாத கருத்தை ஊரின் கருத்தாய் உணர்வதும்...!! அவர்களின் அடுக்கடுக்கான அசிங்கமான போஸ்ட் களால் எமது இளைஞர்களின் மனோ பாவம் மாரிச்செல்வதும்... நிறுத்தப் பட வேண்டும்... !! ஊரை கைகலப்பு நோக்கி நகர்த்தும் இந்த நெருப்பு அணைக்கப் படவேண்டும்...!! பாவம்.... விட்டிலாகும் இளம் அப்பாவிகள் பாதுகாக்கப் படவேண்டும்..!!
கண்ணியம் மிக்க Group Admin களே... பல சொந்தச் சிரமங்களோடு.. நன்மையை எதிபார்த்து.. இந்த குழுமங்களை நடாத்திச் செல்பவர்களே... அல்லாஹ் உங்களைப் பொருந்திக்கொள்வான்...
தயவு செய்து இந்த fake Profile களை இல்லாமல் செய்யுங்கள்.!! விரிந்து செல்லும் விரோதத்தின் வீரியம் தடுங்கள்...!! உங்கள் மேடைகளில் தான் அவர்கள் ஆடுகிறார்கள்..! மிகச் சுதந்திரமாய் விரிசல் விதைக்கிறார்கள்... விரட்டியடியுங்கள் ..!!
உங்கள் குழுமத்தில் 5 பேர் இருந்தாலும் போதும்.. அது அழகான கருத்துக்களால் காட்சியளிக்கும்..!! நல்லோர் மட்டும் உலாவும் விழுமிய பூங்காக்களாக அவை மனம் வீசும்...!!
தூசனம், பிரதேசவாதம், தூண்டிவிடுதல், முகஸ்துதி.. etc.. உங்கள் குழுமத்திற்கு வேண்டாம்..!! நன்மைகளுக்காக நீங்கள் கட்டிய கூட்டில் ஏனிந்த நரகத்தின் வாசனை?
எனக்குத் தெரியும்... ஒரே இரவில் அனைவரையும் அகற்றுவது சிரமம்... எனினும் ஒரு நாளைக்கு 10 கிருமிகளையேனும் இலக்கு வையுங்கள்..! ஒரு மாதத்தில் இந்த நோய் குணமாகும்...!!
அல்லாஹ் உங்கள் குழுமங்களை தூய்மைப் படுத்துவானாக..
இந்த சேவையை மறுமைத்தராசில் பாரமான ஒன்றாய் ஆக்கி வைப்பானாக..!!
-Marikkar SACP-


0 Comments