Subscribe Us

header ads

மனித உடலில் செயற்கையாக கை, கால்களை உருவாக்கும் முயற்சியில் ஆஸ்திரியா நிபுணர்கள் சோதனை...


மனித உடலில் செயற்கையாக கை, கால்களை உருவாக்கி வளரச் செய்யும் ஆஸ்திரியா நிபுணர்கள் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

கை, கால்கள் மற்றும் அபவயங்கள் இல்லாமல் பிறக்கும் குழந்தைகள் விபத்தில் உறுப்புகளை இழக்கும் மனிதர்களுக்கு செயற்கையான முறையில் உறுப்புகளை உடலில் வளரச் செய்யும் ஆராய்ச்சி அமெரிக்காவில் உள்ள மசாஜுசெட்ஸ் பொது மருத்துவ மனையில் நடந்து வருகிறது.

ஆஸ்திரியா மருத்துவ நிபுணர் ஹெரால்டு செட் தலைமையிலான மருத்துவ குழு இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

முதலில் எலிகளை வைத்து நடத்திய சோதனை வெற்றி அடைந்து உள்ளது. இப்போது குரங்கை வைத்து இந்த முயற்சி நடத்தி வருகிறது. எலும்பு, ரத்த நாளம், சதையுடன் கூடிய உறுப்பில் டாக்டர்கள் தயாரித்த திசுக்களை சேர்த்து கை, கால்களை வளரச் செய்கிறார்கள். இந்த புதிய திசுக்களை உடல் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஆராய்ச்சி நடந்து வருகிறது.

குரங்குக்கு நடக்கும் மருத்துவ சோதனை வெற்றி பெற்றால் அதன் அடிப்படையில் மனித உடலிலும் கை, கால்களை வளரச் செய்ய முடியும் என்று டாக்டர்கள் நம்புகிறார்கள்.

Post a Comment

0 Comments