வட்டரக்க விஜித தேரர் கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பொது பல சேனா அமைப்பே காரணம் என வட்டரக்க விஜித தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
தேரரின் சட்டத்தரணி சேனக பெரேராவிடம் இச்சம்பவம் தொடர்பில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன், வாழைத்தோட்ட பொலிஸாரும் இத்தாக்குதலுக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தாக்குதலில் தேரரின் முதுகுப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தமது அமைப்பின் மீது வட்டரக்க விஜித தேரர் விடுத்துள்ள குற்றச்சாட்டை பொது பல சேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே மறுத்துள்ளார்.


0 Comments