Subscribe Us

புலிகளுக்கு பணம் வழங்கியமை குறித்து பகிரங்க விவாதத்திற்கு மகிந்தவை அழைக்கும் சம்பிக்க


விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ராடா நிறுவனத்தின் ஊடாக பணம் கொடுக்கப்பட்டதா? இல்லையா? என்பது சம்பந்தமாக தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சவால் விடுத்துள்ளார்.

கொழும்பு கில்பர்ட் டெரஸில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ராடா நிறுவனத்தின் பிரதானிகளாக இருந்த டிரான் அலஸ் மற்றும் எமில்காந்தன் ஊடாக மகிந்த ராஜபக்ச, திறைசேரியில் இருந்து 8 ஆயிரம் லட்சம் பணத்தை விடுதலைப் புலிகளுக்கு வழங்கினார்.

இது தொடர்பான சகல தகவல்களும் என்னிடம் உள்ளன எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தால், நாடு சமஷ்டி நாடாக மாறும் எனவும் அரச நிறுவனங்கள் தனியார்மயப்படுத்தப்படும் எனவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சிக்கு வந்தாலேயே அவ்வாறான ஆபத்து ஏற்படும் எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments