Subscribe Us

header ads

அப்துல் கலாம் பெயரில் ஒரு கப்பல் - இளைஞரின் கண்டுபிடிப்பு!




தஞ்சாவூர்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் இளைஞர் ஒருவரால் தயாரிக்கப்பட்டுள்ள மாதிரி கப்பல் ஒன்று பொதுமக்கள் பலராலும் வரவேற்பை பெற்றுள்ளது



தஞ்சை மாவட்டம் அதிரையை சேர்ந்தவர் பிரைட் மீரா. அவர் அங்கு சொந்தமாக மின்சாதனப் பொருட்கள் தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு கிடைக்கும் ஓய்வான நேரத்தில் பயனுள்ள வகையில் பல அறிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறார். குறிப்பாக இந்திய தேசத்தின் மீது தான் கொண்டுள்ள அளவில்லா பற்றுதலை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினத்தன்றும் பல கண்டுபிடிப்புகளை தனது சொந்த செலவில் பல்வேறு நுணுக்கங்களோடு தொடர்ந்து உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் தனது புதிய கண்டுபிடிப்புக்கு 'அப்துல் கலாம்' பெயரை சூற்றி மகிழ்ந்திருக்கிறார். அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் இவரது படைப்பை அங்கீகரிக்கும் வகையில் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்ட 69 வது ஆண்டு சுதந்திர தினவிழாவில் இளம் விஞ்ஞானி 'பிரைட்' மீரா கெளரவிக்கப்பட்டார். இவருக்கு அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி, அதிரை ரெட் கிராஸ் சேர்மன் மரைக்கா இத்ரீஸ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் விழாவில் கலந்துகொண்ட பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இவரது கண்டுபிடிப்புகள் மாணவ மாணவிகளின் பார்வைக்காக இவரது பிரைட் எலெக்ட்ரிக் கடையில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

ஏற்கனவே இவர் கண்டுபிடித்த சிறு சிறு கண்டுபிடிப்புகளை பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளும், இணையதளங்களும், பத்திரிக்கைகளும் அங்கீகரித்து அவரது படைப்புகளை படம்பிடித்து செய்தியாக பரப்பி வருகின்றன. மேலும் தனது நாட்டை நேசிக்கும் பண்பின் காரணமாக 'தேசபற்று மிக்கவர்' என்ற விருதும் பெற்றுள்ளார்.

எனினும் இவரது கண்டுபிடிப்புகளை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்பதே இவருக்கும்,இவரது கண்டுபிடிப்புகளுக்கும் சிறந்த அங்கீகாரமாக இருக்கும் என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments