(எம்.எம்.ஜபீர்)
கிட்டங்கி தாம்போதி வீதியில் வீதி மின் விளக்குகள் பொருத்தப்படாததால் அவ்வீதியில் பயணிக்கும் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
கல்முனையிலிருந்து கல்லோயா குடியேற்றத் திட்ட கிராமங்களுக்கு செல்லும் இப்பிரதான பாதையில் கிட்டங்கி பாலம் தொடக்கம் சவளக்கடை தபால் அலுவலக சந்தி வரையான ஒரு கிலோமீற்றர் பிரதான பாதையே இரவு நேரங்களில் வீதி மின் விளக்குகளின்றி இருளில் மூழ்கி வருகின்றன.
இதன் காரணமாக இவ்வீதியில் வழிப்பறி கொள்ளைஇ முதலைகளின் நடமாட்டம் ஆகியவற்றினால் இரவு வேளைகளில் மக்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை தோன்றியுள்ளது.
இவ்வீதியானது கிட்டங்கி பாலத்திலிருந்து 500 மீற்றர் கல்முனை மாநகர சபைக்கும் மீதியாகவுள்ள 500 மீற்றர் நாவிதன்வெளி பிரதேச சபைக்கும் உரியது.
கல்முனை நகரையும் கல்லோயா குடியேற்றத் திட்ட கிராமங்களையும் இணைக்கும் இவ்வீதியினூடாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். இவர்களின் இரவு நேர போக்குவரத்து வசதி கருதி கிட்டங்கி தாம்போதி வீதியில் வீதி மின் விளக்குகளை பொருத்துமாறு மக்கள் கல்முனை மாநகர சபைக்கும் மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபைக்கும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 Comments