ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள், கட்சியின் தீர்மானங்களுக்கு உடன்படாத போனால் கடுமையான ஒழுக்க நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கட்சியின் தீர்மானங்களுக்கு உறுப்பினர்கள் உடன்பட வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று திஸாநாயக்க நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலேயே இயங்குகிறது.
அதற்கென்று தனியான தலைவர் இல்லை. இந்தநிலையில் இந்தக்கூட்டமைப்புக்குள் இனவாத கட்சிகளின் பங்களிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் துமிந்த திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
0 Comments