அரசியல் அனுபவம் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்டர் ஒருவருக்கே எதிர்க்கட்சி பதவி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்க வேண்டியது தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச போன்ற ஒருவருக்கு அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான ஒரு முக்கிய பொறுப்பினை பேச்சில் மாத்திரம் செயற்படுகின்றவருக்கு அல்ல செயற்பாட்டிலும் உள்ள ஒருவருக்கே வழங்கப்பட வேண்டும்.
நாடாளுமன்றில் பிரதான கட்சிகள் இணைந்து புதிய பயணம் ஒன்றிற்கு ஆயத்தமாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் விமல் வீரவன்ச போன்று நாடாளுமன்றத்திற்கு பின் கதவால் வந்தவர்கள் எதிர்கட்சி தலைவர் பதவியை பெற்றுகொள்ள முயற்சிக்கின்றார்கள்.
அவர்கள் எவ்வாறான சூழ்ச்சிகளை மேற்கொண்டாலும் ஜனாதிபதி புத்திசாலிதனமாக தகுதியானவர்களுக்கு பதவியை வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.
தங்கள் கட்சியில் போட்டியிட்டு அமைச்சு பதவிகளை பெற்று கொண்டவர்களே அமைதியாக இருக்கும் போது முன்னணி விளக்கில் வெளிச்சத்தை பார்க்கும் விமல் வீரவன்ச எதிர்க்கட்சி தலைவர் கேட்டு ஜனாதிபதிக்கு சவால் விடுவது பெரும் நகைச்சுவாயான ஒரு விடயமாகும்.
ஜனவரி மாதம் 08ஆம் திகதி மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மற்றும் விமல் வீரவன்ச குழுவினர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இறுதி சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments