Subscribe Us

header ads

மீண்டும் ஒருமுறை சந்தர்ப்பம் தாருங்கள் என மன்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ

அபு அலா –


முஸ்லிம்கள் என்னை தோற்கடித்து விட்டார்கள் இம்முறை எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒவ்வொரு விகாரையாகச் சென்று அங்கு வரும் பொதுமக்களிடம் கூறி வருகின்றார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமாகிய சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களையும் ஆதரித்து அக்கரைப்பற்றில் இடம்பெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா இன்று மஹிந்தவை பிரதமராக்க துடிக்கின்றார். அவர் எவ்வளவுதான் துடித்தாலும் மஹிந்தவை பிரதமராக்க முடியாது. அது இலேசிப்பட்ட விடயமும் அல்ல என்பதை அவர் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

எமது சமூகத்தையும், முஸ்லிம் காங்கிரஸான இந்த மாபெரும் இயக்கத்தையும் வெறுத்து வாழ்பவர்கள் நிச்சயமாக தோல்வியடைவார்கள். அதற்கு சான்றாக முஸ்லிம் காங்கிரஸ் செய்து காட்டிய வரலாறும், எமது தலைமை வகுத்த சனக்கிய அரசியல் வியுகங்களை நாம் அறிவோம். உதாரணமாக கடந்த ஜனாதிபதி தேர்தலை நாம் உற்று நோக்குவோமாயின் மஹிந்தவின் ஆட்சிக்காலம் இரண்டு வருடங்கள் இருந்தும் அவரின் ஆட்சிக்காலத்தை செய்ய முடியாதளவு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வகுத்த சனக்கியமிக்க அரசியல் வியுகத்தினால் அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம்.  

இன்று அதாஉல்லா சொல்வதைப்போல் மஹிந்த ராஜபக்ஷவினால் எதுவும் செய்யமுடியாது. எது செய்வதாக இருந்தாலும் ஜனாதிபதி மைத்ரீபால சிறிசேனாவினால் மட்டும்தான் முடியும். ஒரு அமைச்சரை நியமிப்பதாக இருந்தால்கூட அதற்கு சக்திமிக்க ஒருவராக ஜனாதிபதி இருக்கின்றார். அவரை எதிர்த்து இந்த அதாஉல்லாவால் ஒன்றுமே செய்யமுடியாது என்றார்.

Post a Comment

0 Comments