ஒட்டகத்தின் வெற்றிக்காக உழைக்கும் பலருக்கு மத்தியில் முக்கியமான ஒரு இடத்தை வகிக்கும் இளம் ஒட்டப்படையனியின் Vote for Camel திறந்த மடல் ஒன்றை தேர்தல் பிரச்சார வேலைகளுக்கு மத்தியில் ஒரு சில நிமிடங்கள் செலவழித்து வாசித்ததன் பிற்பாடு அவர்களுக்கான ஒரு பதிலை இதே சமுக வலைத்தளம் மூலம் வெளியிடலாம் என்ற நோக்கோடு இதனை அவர்களுக்கு சமர்ப்பிக்க்றேன்.
என்னதான் என்னைப் பற்றி பலர் பலவிதமாக பேசினாலும் எனதிறைவன் என்னை எந்த சந்தர்ப்பத்திலும் கைவிட்டதில்லை. தேர்தல் நெருங்க நெருங்க பல கட்சிகள் பொதுத் தேர்தல் வேட்பாளர் நியமனப் பத்திரங்களை கொண்டு வந்த என் முன்னே நீட்டிய போது, ஒரு சரியான முடிவை எடுக்க முடியாமல் தவித்த நான், என்னை முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்தேன்.
ஒப்படைத்ததன் பிற்பாடு என்னை தூற்றியவர்கள் என்னுடன் அன்பு கொண்டார்கள், எனக்கு வேட்பு மனு தர தயாராக இருந்த கட்சிகள் பின்வாங்கிக்கொண்டன, என்னோடு நிரந்தர பகைக் கொண்ட பலர் நிரந்தர நண்பர்களானார்கள், என்னுடைய காதுக்கு கேட்காத நல்ல பல ஆலோசனைகள் கேட்கத்தொடங்கின, உலமாக்கள் புத்திஜீவிகள் என்னக்காக பிரார்த்திக்கத் தொடங்கினார்கள், தாய்மார்கள் சகோதரிகள் எனக்காக நோன்பு வைத்ததை ஆரம்பித்தார்கள்.
இப்படி பல மாற்றங்கள் நிகழ்ந்த தருவாயில் என்னை ஒரு சக்தி இழுத்துச்சென்று அமர்த்திய இடம் தான் இந்த ஒட்டக் கூட்டணி, நான் எந்த ஒரு மறைமுக திட்டத்தோடும் ஒட்டகக் கூட்டணியில் சேர்ந்தவன் அல்ல, யாரோடும் எந்த வித உடன்படிக்கையும் செய்து சேர்ந்தவன் அல்ல, இந்த ஒட்டக் கூட்டணியில் களமிறங்கி இருக்கும் 11 வேட்பாளர்களில் நான் முதன்மை வேட்பாளரும் அல்ல, சுயேச்சை அணியின் தலைவனும் அல்ல, மாறாக சாதாரண வேட்பாளர்களில் நானும் ஒருவன்.
26 வருடங்கள் பெரிய கட்சிகளுக்கு அடிமைப்பட்டு நசுங்கிய புத்தளத்தின் வரலாற்றை மாற்றியமைக்க, புத்தளத்திற்கென ஒரு தனியான அரசியல் கலாச்சாரத்தை (தேவைப்படின் கட்சியையும்) உருவாக்க முயற்சிக்கும் இந்த போர் களத்தின் குதித்திருக்கும் பலருக்கு மத்தியில் நானும் ஒரு போராளியாக களமிறங்கி இருக்கிறேன்.
இந்த களத்திலே என்னை மக்கள் ஆதரித்து பாராளுமன்றம் செல்ல ஆணை தருவார்கள் என்றால், நிச்சயமாக எப்படி வாக்கு சேகரிக்க வீட்டுக்கு வீடு, ஊருக்கு ஊராக சென்றோமோ?, அதே போல மீண்டும் ஒருமுறை "நாம் பாராளுமன்றத்தில் எந்த பக்கத்தில் அமர வேண்டும்" என்ற கேள்விக்கு பதிலை தேடுவதற்கு வீடு வீடாக செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
கடந்த காலத்தில் நாம் செய்த எந்த வித உடன்படிக்கையையும் இடையில் முறித்துவிட்டு துரோகம் செய்த வரலாறு எங்களிடம் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள், அதே போல இங்கு உங்களுக்கு தந்த வாக்குறுதியையும் நாங்கள் அதே பெருமதியோடுதான் பார்க்கின்றோம். நிச்சயமாக இளம் ஒட்டகப் படையின் முயற்சிக்கு என்னுடைய உதவி என்றும் இருக்கும்.
0 Comments