Subscribe Us

header ads

வண்ணங்களால் மக்களை மகிழ்விக்கும் இளம் தலைமுறை ஓவியர்கள்



நம் நாட்டில் பாரம்பரியமாக இருந்துவரும் கலைநயங்களும், கட்டிடக்கலையும் சாதாரண மக்களிடமிருந்து தற்போது விலகி தனிப்பட்ட சமூக அந்தஸ்தில் இருப்போர் மட்டுமே ரசிக்கும் பொருளாகிவிட்டது. 

பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஓவியங்கள் வெறும் காட்சிப் பொருளாகவே கருதப்படுகிறது. அது நிச்சயமாக புதிய விதமான சிந்தனைகளைக் கொடுத்து அந்த நாளை சிறப்பாக்கும் என நம்பும் இந்த இளம் தலைமுறைக் கலைஞர்கள் ஒரு புதிய முயற்சியால் மும்பையில் மக்களின் வாழ்வில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மும்பை நகரில் முக்கிய பகுதிகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ‘டாக்ஸிக்களின்’ உட்புறத்தை வண்ணமயமாக்கி உள்ளனர் சில புதிய தலைமுறை கலைஞர்கள். பல்வேறு வண்ணங்களில் வெவ்வேறு கதைகள் சொல்லும் இவை உலகின் மிக அழகிய ‘டாக்ஸி’ என அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

கிரவுட்பண்டிங் மூலம் தொடங்கியுள்ள இந்தப் பணியில் சுமார் 100 ஓவியக் கலைஞர்கள் ஒரு லட்சத்து இருபதாயிரம் மக்களுக்கு இதன்மூலம் தங்களது படைப்புகளை வரும் டிசம்பருக்குள் காட்சிப்படுத்த உள்ளனர். 

‘டாக்ஸி பேப்ரிக்’ என பெயரிடப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் இதுவரை, 7 டாக்ஸிக்கள் இந்தக் கலைஞர்களது கைவண்ணத்தில் மின்னி வருகின்றன.






Post a Comment

0 Comments