செய்யும் தொழில் மீது உள்ள ஆசையையும், ஆர்வத்தையும் உலகத்துக்கே எடுத்துக்காட்டும் வகையில் ஈரானைச் சேர்ந்த தொழிலாளி வித்தியாசமான முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானைச் சேர்ந்தவர் முகமது அலி ஹசான்கனி(வயது 42). பொதுவாக அலி வாக்ஸிமா என அறியப்படும் இவர் செருப்பு தைக்கும் தொழிலாளி. ஒரு தொலைபேசி அழைப்பு செய்தால் போதும், அந்த இடத்திற்கே சென்று செருப்பு தைத்து கொடுக்கும் புதிய யுக்தியை ஆரம்பித்தார். செருப்பு தைப்பதிலும், அதை பழுதுபார்ப்பதிலும் இருந்த இவரது வித்தியாசமான அணுகுமுறை இந்நாட்டின் பத்திரிகைகளில் அவரைப்பற்றி எழுதும் விதமாக அமைந்தது.
சுமார் இருபது ஆண்டுகளாக சைக்கிளில் இந்த ஊரைச் சுற்றிவந்த அவர் பின்னாளில் மோட்டார் வைத்த மூன்று சக்கர வாகனங்களில் வந்து செருப்பு தைக்கும் வேலையைச் செய்து வருகிறார்.
சமீபத்தில் ஆண்களின் ஷூ போல அவரது வாகனத்தை வடிமைத்த அலி தற்போது தனது நான்கு மாத உழைப்பில் பெண்களின் ஹீல்ஸ் ஷூ போன்ற காரை வடிவமைத்துள்ளார்.
விரைவில் குழந்தைகள் அணியும் ஷூ போலவும் வாகனம் ஒன்றை வடிவமைக்க இருப்பதாக அவர் ஆர்வமாக தெரிவித்தார். இவரது வாகனங்கள் தெஹ்ரானில் வசிக்கும், வந்து செல்லும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உங்களது தொழிலை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள்?




0 Comments