Subscribe Us

header ads

இ-சிகரெட்டும் உடலுக்கு கேடு விளைவிக்கும்!...



புகைப்பழக்கத்தால் ஆண்டுதோறும் சுமார் 75 ஆயிரம் பேர் பலியாவதைத் தடுக்க எண்ணிய இங்கிலாந்து அரசாங்கம் இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டை மக்களுக்கு பரிந்துரை செய்தது.

பொதுவாக விற்கப்படும் சிகரெட்களை விட பாதுகாப்பானது என இங்கிலாந்து அரசு அந்நாட்டில் புகைப்பழக்கம் கொண்ட சுமார் 8 லட்சம் மக்களுக்கு பரிந்துரைத்த இ-சிகரெட் உடலுக்கு கேடு விளைவிக்கும் என தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு 11 ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இ-சிகரெட் 95 சதவிகிதம் பிரச்சனை விளைவிக்காது என கருதப்பட்டது. இதனால் இந்த அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பில் இ-சிகரெட்டை மக்களுக்கு பரிந்துரைத்தது.

இந்நிலையில் இந்த ஆய்வாளர்களில் மூவர் இ-சிகரெட் நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு தவறான கருத்தை வெளியிட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இவ்வாறு பொய்யான கருத்தை அரசின் மூலமே வெளியிடப்படுவதால் இளைஞர்கள் புகைப்பழக்கத்தை விட வாய்ப்பின்றி போய்விடும்.

இந்த இ-சிகரெட், நிக்கோட்டின் உடன் முன்னாளில் சாதாரண சிகரெட்களை தயாரிப்பவர்களாலேயே உருவாக்கப்பட்டுகிறது. ஆகவே, இதிலும், நரம்புச்சிதைவு, இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் கட்டிகள் வளர்ச்சியைத் தூண்டும் காரணிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு உலக சுகாதார மையம் நச்சுத் தன்மையால், இதை சுவாசிப்பவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இ-சிகரெட்களை அறைகளுக்குள் உபயோகிக்க தடை விதித்திருந்தது.

எனினும், இங்கிலாந்து அரசாங்கம், இ-சிகரெட்டை மக்களுக்கு பரிந்துரைத்த கருத்தை திரும்பப் பெறவில்லை. இது முந்தைய சிகரெட்டைக் காட்டிலும் குறைவான தீங்கையே விளைவிக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments