Subscribe Us

header ads

தேசிய காங்கிரஸின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆப்தீன் தமீம் மு.காவில் இணைவு

அபு அலா –


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் 3 வேட்பாளர்களையும் ஆதரித்து அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவு கோணாவத்தையில் நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை (02) தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளரும், அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த பிரச்சாரக் கூட்டத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அட்டாளைச்சேனை அமைப்பாளரும், மத்திய குழுத் தலைவருமான ஏ.எல்.எம்.நஸீர், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோர் பிரதம பேச்சாளர்களாக கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்த பிரச்சார கூட்டத்தில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோருடன் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல்.முனாப், என்.எல்.யாசீர் ஐமன், ஐ.எல்.நஸீர் மற்றும் உச்சபீட உறுப்பினர் யூ.எல்.எம்.வாஹிட் உள்ளிட்ட பல கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்காக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினராக இருந்துகொண்டு முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் அணியினரை வெற்றிகொள்வதற்காக அட்டாளைச்சேனையில் பல பணிகளை முன்னெடுத்து வந்த ஆப்தீன் தமீம் என்பவர் இந்த பிரச்சாரக் கூட்டத்தில் இணைந்துகொண்டு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும், குறிப்பிட்ட பிரிவிலுள்ள மு.காவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸின் எதிர்கால தேர்தல் நடவடிக்கைகளுக்காக தான் பாடுபட்டு உழைக்கவுள்ளதாகவும் தெரிவித்து இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.







Post a Comment

0 Comments